Posts

உங்கள் மூளை எந்த பக்கம் வேலை செய்கிறது தெரியுமா?

Image
ஆல்பர்ட் ஏய்ன்ஸ்டீன் மூளையை முழுவதுமாக பயன்படுத்தியதால் உலகம் போற்றும் விஞ்ஞானியானர். ஆனால் நாமோ மூலையில் 10 சதவீதத்தை மட்டுமே பயன்படுத்துவதால் பன்றி மேய்க்கிறோம் என சிலர் கூற நாம் கேள்விபட்டிருப்போம். இது உண்மைதானா என்றால் நிச்சயம் உண்மை இல்லை. மதியை பயன்படுத்தாமல் விதியே என இருப்போரை சிந்திக்க தூண்டுவதற்காக இத்தகைய ஒரு கூற்று ஊக்கமூட்டம் பேச்சாளர்களால் பரப்பப்பட்டு வருகிறது.    மனித மூளை அனைவருக்கும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது மற்றும் இயங்குகிறது. ஆனால் மூளையின் எதோ ஒரு மூலையில் இருக்கும் கூர் மதியை சரியாக பயன்படுத்தி கொள்ளும் போது மட்டுமே சிலர் புத்திசாலிகள் எனவும், மற்றவர்களை மக்குகள் எனவும் வகைபடுத்த படுகின்றன. எண்ணிலடங்கா தகவல்களையும், நினைவுகளையும் போதித்து வைக்க உதவும் மூளையானது நம் உணர்சிகளின் மையமாகவும், உடல் இயக்கங்களை கட்டுபடுத்தும் தலைக்குள் இருக்கும் தலைமை செயலகமாகவும் இருகின்றது. நமது மூளை இரு அரை கோளங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. மூளையின் இரு அரை கோளங்களையும், ஒரு நரம்பு கற்றை இணைகிறது. அதனை CORPUS CALLOSUM என அழைகின்றனர்.    மூளையின் ஓ...

சிப்பிக்குள் முத்து எப்படி உருவாகுகிறது தெரியுமா?

Image
தங்க நகை என்ற உடன் ஒரு பெண்ணின் முகம் பொன் முகம் போல் ஆகும். அதிலும் தங்க நகைகளில் வைரம், மாணிக்கம், பவளம், முத்து உள்ளிட்ட அலங்கார பொருட்கள் பதிக்கப்பட்ட நகைகளை விரும்பாதவர்ளே இல்லை என்று கூறலாம். குறிப்பாக நெக் லெஸ், காதணிகள் உள்ளிட்ட அணிகலன்களை வாங்குவோர் முத்து பதிக்கப்பட்ட நகைகளுக்கு முதலிடம் கொடுத்து வாங்கி மகிழ்வர் ஏனெனில் பிற அலங்கார கற்கள் பதித்த நகைகளை விட முத்து பதித்த நகைகளின் விலை சற்று குறைவுதான்.    அதே நேரத்தில் சிரிக்கும் பருவ மங்கையின் பற்களை போல, முத்துகளின் வெள்ளை நிறம் நகைகளுக்கு கூடுதல் அழகையும் பொலிவையும் கொடுக்கும். தங்க நகைகள் விரும்பாத நங்கைகள் கூட முத்துகளால் ஆன நகைகளை அணிய விரும்புவார்கள். இயற்கையான இந்த முத்துகள் கடல் வாழ் உயிரினமான சிப்பிகளில் இருந்து கிடைகிறது என்பது பலருக்கும் தெரிந்த விஷயம் தான். ஆனால் சிப்பிகள் அழகிய முத்துகளை ஏன் உருவாக்குகின்றன என்பது பலருக்கும் தெரியாது.    தனது உடலுக்குள் புகுந்துவிடும் அந்நிய பொருட்களில் இருந்து தன்னை பாதுகாத்து கொள்ள சிப்பியின் உடலுக்குள் நடக்கும் ஒரு உயிரியல் செயல் முறையின் விளைவ...

ராகெட் ஏன் செங்குத்தாக ஏவப்படுகிறது

Image
ராக்கெட்டுகள் செலுத்தபடுவதை நாம் பலமுறை தொலைகாட்சிகளில் பார்த்திருக்கலாம். ஏவுதளத்தில் செங்குத்தாக நிறுத்தப்பட்டு இருக்கும். செலுத்துவதற்கான COUNTDOWN முடிந்ததும் தீபிலம்புடன் ஏராளமான புகையை கக்கிக்கொண்டு செங்குத்தாக மேல் எழும்பி விண்வெளியை நோக்கி புறப்பட்டு செல்லும். ராக்கெட்டுகள் ஏன் செங்குத்தாக ஏவப்படுகின்றன. அதே போல் மனிதர்களை தாங்கி செல்லும் விண்கலங்களும் ராகெட்டுடன் இணைத்து செங்குத்தாகவே ஏவபடுகின்றன. விண்வெளியில் இருந்து பூமிக்கு திரும்பும் விண்கலங்கள் விமானம் போலவே RUN WAY  யில் தரை இறங்கும் போது, விண்வெளிக்கு செத்தபடும் போது மட்டும் ஏன் செங்குத்தாக செலுத்தப்டுகின்றன என்பதை பற்றி தெரியுமா?    ராக்கெட் என்பது விண்வெளிக்கு, செயற்கைக்கோள்கள், மனிதரை தாங்கி செல்லும் விண்கலங்கள் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு தேவையான பொருட்கள் ஆகியவற்றை எடுத்து செல்ல உதவும் ஓர் ஏவு ஊர்தி ஆகும். ராக்கெட்டுகள் விமானங்களை போல ஏரோ டைனமிக்ஸ் எனப்படும் காற்றியக்கவியலின் அடிப்படையில் பறப்பதில்லை, மாறாக ஒவ்வொரு வினைக்கும் அதற்கு இணையான எதிர்வினை உண்டு என கூறும் நியுட்டனின் மூன்ற...

மனிதனை போல் விவசாயம் செய்யும் இன்னொரு உயிரினம்

Image
டைனோசர்கள் பூமியில் இருந்து அழிந்து 6 கோடி ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. அதற்கு முன்பே பூமியில் தோன்றி இன்று வரை நம்மிடம் வாழும் உயிரினம் எறும்புகள் தான். கிட்டத்தட்ட 13 கோடி ஆண்டுகளாக வாழ்ந்து கொண்டு இருகின்றன. எறும்புகளில் 10,000 க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. வெப்பமான பகுதிகளில் இவை கூட்டம் கூட்டமாக வாழும் தம்மை கொண்டவை. எறும்புகள் பொதுவாக 45 முதல் 60 நாட்கள் வரை உயிர் வாழக்கூடியது. இதிலும் கருப்பு பெண் எறும்பு என்ற இனவகை எறும்புகள் 15 ஆண்டுகள் வரை உயிர்வாழும் என்று ப்ரிடானியா ஆய்வு தெரிவிக்கின்றது.    இதன் கால்கள் மிக மிக வலுவானவை மிக வேகமாக இயங்க கூடியவை. ஒரு மனிதன் ஓடக்கூடிய வேகத்தில் இது ஓட கூடியது. அதன் உருவத்தோடு ஒப்பிடும்போது இது அதிபயங்கரமான மின்னல் வேகம். அதே போல தனது எடையை போல் 20 மடங்கு கூடுதலான எடையை அசால்டாக தூக்கி செல்ல கூடியது. இதனோடு மனிதனை ஒப்பிடால், 50 கிலோ எடை கொண்ட ஒரு மனிதன் 1000 கிலோ எடையை தூக்கி கொண்டு ஓட வேண்டும். இது சாத்தியம் இல்லாத ஓன்று.    எறும்புகள் 6 வண்ணங்களில் காணபடுகின்றது. பச்சை, சிவப்பு, பழுப்பு, மஞ்சள், நீளம், மற்றும் ...

மரண வாக்குமூலம் எப்பொழுது ஏற்றுக்கொள்ளப்படும்

Image
பல வழக்குகளின் போக்கையே திசை திருப்பி விடும் சக்தி மரண வாக்கு மூலத்துக்கு உள்ளது. இந்திய சான்று சட்டம் 1872 பிரிவு 32ன் படி, மரண வாக்கு மூலத்தை ஏற்று கொள்ள கூடிய வாக்கு மூலமாக கருதலாம் என்று சட்டம் சொல்கிறது.    ஒருவர் இறக்கும் போதோ, இறப்பை எதிர்பார்த்து இருக்கும் போதோ, கொடுக்கும் வாக்கு மூலமே மரண வாக்குமூலம். தனது இறப்புக்கு யார் காரணம், எப்படி தாக்கினார்கள், என்ன ஆயுதம் பயன்படுத்தினார்கள் என்று இதில் விளக்கமாக கூறுவார்கள். இறக்கும் தருவாயில் இருக்கும் ஒருவர், தனது வாக்கு மூலத்தை, மருத்துவமனையில் கொடுக்கலாம். அல்லது தாக்கப்பட்ட இடத்திலேயே கூட கொடுக்கலாம். எங்கு மரண வாக்குமூலம் கொடுத்தாலும் செல்லுபடியாகும். யார் தூண்டுதலும் இல்லாமல் தானே முன்வந்து கொடுப்பது தான் மரண வாக்குமூலம்.    சிகிச்சை அளிக்கும் மருத்துவர், காவல் துறை அதிகாரி, குற்றவியல் முன்னிலையில் கொடுக்கலாம். வாக்குமூலம் கொடுக்கும் நபரின் உயிர் நீடிக்கும் என்றால், காவல் துறையினர், குற்றவியல் நடுவரை அழைத்து வந்து வாக்குமூலம் பதிவு செய்வார்கள். தாசில்தார் கூட மரண வாக்குமூலத்தை பதிவு செய்யலாம். சி...

நிச்சயதார்த்த மாத்திரை பற்றி தெரியுமா ?

Image
நிச்சயதார்த்த மாத்திரை என்று சொன்னதும் பலருக்கும், இது ஆண்மைக்கான சமாசாரம் என்று நினைக்கத் தோன்றும். ஆனால் இது பெண்களுக்கான ஓன்று. பெண்களுக்கு மட்டும் அல்ல, வருங்களால சந்ததிகளுக்கு கூட என்று சொல்லலாம். நமது நாட்டில் பிறக்கும் குழந்தைகளில் 3 சதவீத குழந்தைகள் பிறவி குறைபாட்டுடன் பிறக்கிறது. மூளை வளர்ச்சி இல்லாமல் பிறப்பது, மூலையில் நீர் கோர்ப்பது. குடல் வெளியில் இருப்பது, சிறுநீரகங்கள் இல்லாமல் பிறப்பது, கை கால் எலும்புகள் வளராமல் இருப்பது இப்படி பட்ட குழந்தைகள் நீண்ட நாட்கள் உயிருடன் வாழமுடியாது.    அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் போன்ற அதி நவீன மருத்துவ கருவிகள் கூட 70 சதவீத குறைகளை மட்டுமே கண்டுபிடிக்க உதவுகின்றன. மீதி 30 சதவீத குறைகளை கண்டுபிடிக்க முடியாது. காது கேளாமல் இருப்பது போன்ற பிறவி கோளாறுகள் வளர வளர தான் தெரியும். ஸ்கேன் மூலம் உயிரை பாதிக்கும் பிரச்சனைகள் மட்டுமே தெரிந்துகொள்ள முடியும்.    பிறவி கோளாறு எப்படி வருகின்றது என்றால், மரபு ரீதியிலான மற்றும் சுற்று சூழல் என்ற ஏராளமான காரணங்களை மருத்துவம் சொன்னாலும், மனக் கோளாறு, முதுகுத்தண்டு பிரச்சனைகளுடன் ...

அடுத்த 100 ஆண்டுகளில் தமிழ் மொழி அழியும்

Image
அடுத்த 100 ஆண்டுகளில் தமிழ் மொழி அழியும் என்ற தலைப்பு பலரையும் அதிர்ச்சிக்குளாயிருக்கலாம். ஆனால் நமது தமிழ் மொழியின் நிலைமை இப்படி தான் உள்ளது. ஆங்கில மொழி வந்த பிறகு, அதனின் தாக்கம் உலகம் முழுவதும் ஊடுருவி, ஆங்கில மொழி உலக பொது மொழியாக்கி பிறகு இதுவரை 247 மொழிகள் அழிந்து இருக்கின்றன.    ஆங்கில மொழி அத்தனை சக்தி படைத்ததா இருக்கு. தமிழ் மொழியும் இப்படி அழிவதற்கான சாத்திய கூறுகள் இருப்பதாக ஆய்வுகளில் கூறுகின்றன. உதாரணமா, ஒரு நாளைக்கு நாம் பேசும் தமிழ் மொழியில் நமக்கே தெரியாமல் எத்தனை ஆங்கில சொற்கள் தமிழோடு கலந்து பேசுகிறோம் என்று தெரியுமா?. இப்படி தான் ஒவ்வொரு மொழியிலும் ஆங்கிலம் ஊடுருவி இருக்கு. இன்னும் 50 ஆண்டுகளில் முழுமையா ஆங்கிலம் ஊடுருவிடும். காரணம் இன்றைய தமிழர்கள் ஆங்கில மோகத்தில் தான் இருக்கிறார்கள். தமிழர்கள் தமிழ் மொழி மீது அக்கறை காட்டுவது இல்லை. தங்கள் குழந்தைகளை கூட ஆங்கில வழி கல்வியில் தான் சேர்க்கின்றனர். ஆங்கிலத்தில் பேசுவதை தான் பெருமையாகவும் கருதுகிறார்கள்.    இந்த நிலை நீடித்தால் இன்னும் 50 ஆண்டுகளில் முழுமையாக ஆங்கிலம் தமிழில் ஊடுரு...