உங்கள் மூளை எந்த பக்கம் வேலை செய்கிறது தெரியுமா?
ஆல்பர்ட் ஏய்ன்ஸ்டீன் மூளையை முழுவதுமாக பயன்படுத்தியதால் உலகம் போற்றும் விஞ்ஞானியானர். ஆனால் நாமோ மூலையில் 10 சதவீதத்தை மட்டுமே பயன்படுத்துவதால் பன்றி மேய்க்கிறோம் என சிலர் கூற நாம் கேள்விபட்டிருப்போம். இது உண்மைதானா என்றால் நிச்சயம் உண்மை இல்லை. மதியை பயன்படுத்தாமல் விதியே என இருப்போரை சிந்திக்க தூண்டுவதற்காக இத்தகைய ஒரு கூற்று ஊக்கமூட்டம் பேச்சாளர்களால் பரப்பப்பட்டு வருகிறது. மனித மூளை அனைவருக்கும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது மற்றும் இயங்குகிறது. ஆனால் மூளையின் எதோ ஒரு மூலையில் இருக்கும் கூர் மதியை சரியாக பயன்படுத்தி கொள்ளும் போது மட்டுமே சிலர் புத்திசாலிகள் எனவும், மற்றவர்களை மக்குகள் எனவும் வகைபடுத்த படுகின்றன. எண்ணிலடங்கா தகவல்களையும், நினைவுகளையும் போதித்து வைக்க உதவும் மூளையானது நம் உணர்சிகளின் மையமாகவும், உடல் இயக்கங்களை கட்டுபடுத்தும் தலைக்குள் இருக்கும் தலைமை செயலகமாகவும் இருகின்றது. நமது மூளை இரு அரை கோளங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. மூளையின் இரு அரை கோளங்களையும், ஒரு நரம்பு கற்றை இணைகிறது. அதனை CORPUS CALLOSUM என அழைகின்றனர். மூளையின் ஓ...