Posts

Showing posts from April, 2018

ரத்தத்தால் எழுதப்பட்ட நூல்

Image
ஜப்பானில் ஒரு காலத்தில் சு-தொக்கு என்ற ஒருவர் மன்னராக இருந்தார். அவர் ஒரு நூல் எழுதியிருக்கிறார். அந்த நூல், புத்தரைப் பற்றி எழுதப்பட்ட ஓன்று. ஒரு மன்னர் பத்தரைப் பற்றி நூல் எழுதுவதில் என்ன அதிசயம் இருக்கிறது என்று கேட்கிறீர்களா? 135 பக்கங்கள் கொண்ட அந்த நூல் முழுவதையும் சு-தொக்கு தன உடல் ரத்தத்தை கொண்டே எழுதினார்...

கிரிக்கெட் பிரியர் உசேன் போல்ட்!

Image
ஒலிம்பிக் 100 மீட்டார், போட்டியில் வெற்றி பெற்று, 'உலகின் மிக வேகமான மனிதர்' என்ற பட்டத்தைத் தக்கவைத்துக் கொண்டிருக்கிற உசைன் போல்ட்டுக்கு படித்த விளையாட்டுகளில் ஓன்று, கிரிக்கெட். கிரிக்கெட்டுக்குப் புகழ்பெற்ற மேற்கிந்தியத் தீவுகளில் ஒன்றான ஜமைக்காவில் பிறந்ததால் இவருக்கு இயல்பாகவே கிரிக்கெட் ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது. வேகப்பந்து வீச்சாளராக ஆசைப் பட்ட போல்டை ஓட்ட பந்தயத்தின் பக்கம் திருப்பி விட்டவர் அவரது பள்ளி விளையாட்டு ஆசிரியர் தான். தீவிர கிரிக்கெட் ரசிகரான தனது தந்தையுடன் பல கிரிக்கெட் போட்டிகளைப் பார்த்திருக்கிறார் உசைன் போல்ட். சில காட்சிப் போட்டிகளில், வெஸ்ட் இண்டீஸ் வீரகளுடன் இணைந்து ஆடியும் இருக்கிறார். போல்ட்டுக்கு பிடித்த கிரிக்கெட் வீரர், பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வக்கார் யூனுஸ். மற்றொருவர் நம்ம சச்சின்-னே தான்..........

தாவரங்களுடன் பேசுங்க

Image
தாவரங்கள் நன்றாக வளர என்ன செய்ய வேண்டும்? 'தண்ணீர் பாய்ச்ச வேண்டும். முறையாக உரமிட வேண்டும்' என்கிறீர்களா? இதெல்லாம் பொதுவான முறைகள். தாவரங்களுடன் மனம்விட்டுப் பேசினால் அவை நன்றாக வளரும் என்கிறார்கள் விஞ்ஞானிகள். தாவரங்களுடன் பேசுவதா? அவற்றுக்கென்ன நாம் பேசுவது புரியுமா என்ன என்று கேள்வி எழுப்புகிறீர்களா? 'தாவரங்களுக்கு மொழி புரியாதுதான். ஆனால் அவை உங்களின் உச்சரிப்பைப் புரிந்து கொள்ளும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். இது தொடர்பான புதுமையான ஆய்வை இங்கிலாந்து விஞ்ஞானிகள் மேற்கொண்டனர். அதன் முடிவில்தான், தாவரங்கள் மனிதர்கள் தம்மிடம் பேசுவதை விரும்புகின்றன என்று அறிவித்துள்ளனர். அதிலும் இங்கிலாந்தின் நியுகேசில் பகுதியில் புழங்கும் உச்சரிப்பு முறையைத் தாவரங்கள் அதிகம் ரசிக்கின்றனவாம். எசக்ஸ், வேல்ஸ் பகுதி உச்சரிப்பு முறைகளும் பலன் கொடுக்கின்றன என்று தெரிவிக்கப்படுகிறது. எசக்ஸ் பகுதி செடி, கொடிகள் விற்பனை மையம் ஒன்றில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஏனோ தெரியவில்லை, மேல்தட்டு மக்களின் உச்சரிப்பு முறையை தாவரங்கள் ரசிக்கவில்லையாம். இங்கிலாந்து இளவரசர...

29-வது வயதில் வரும் பயம்!

Image
வயதாவது குறித்த கவலை ஆண்களை விடப் பெண்களுக்கு அதிகம் உண்டு. ஆனால் சரியாக 29-வது வயதில் தான் வயது குறித்த பயம் பெண்களைப் பற்றிக் கொள்கிறதாம். இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு சருமப் பராமரிப்பு சாதனத் தயாரிப்பு நிறுவனம் இது தொடர்பாக 2 ஆயிரம் பெண்களிடம் ஒரு சர்வே மேற்கொண்டது. அப்போது, பெண்களுக்குத் தங்கள் '2௦' வயதுகள் கூடக் கூட, வயது குறித்த பயமும் மெதுவாக வளர்வது தெரியவந்தது. உண்மையில் டீனேஜ் பெண்கள் தங்கள் வயதை விட அதிக வயது கொண்டவர்களாகத் தோற்றம் காட்ட விரும்புகிறார்கள். அத்தகையவர்களுக்கு, 2௦ வயதுகளின் ஆரம்பம்தான் நல்ல திருப்தி தருகிறது. ஆனால் 3௦ வயதை நெருங்குகையில் அந்தத் திருப்தி மறைந்துவிடுகிறது. மாறாக், வயது அதிகரிப்பது குறித்த பயம் படிக்கத் தொடங்கிவிடுகிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

விஷத்தினால் பாதிப்பு

Image
நமது உடலினுள் செல்லும் பொருள் நமது உடலுக்கோ, உயிருக்கோ தற்காலிகமாக அல்லது, நிரந்தரமாக, ஊறு விளைவிக்குமானால், அது விஷத்தன்மை உடையது என்று பொருளாகும். இந்த விஷம் வாயினால் உட்கொள்வதாலும் (கள்ளச்சாராயம், போலி மருந்துகள்), சுவாசிப்பதாலும் (கார்பன் மோனாக்சைடு), தோலின் மூலமும் (பூச்சிக் கொல்லி மருந்து) ஊசி போன்ற கூர்மையான பொருளால் (பாம்பு விஷம்) உடலினுள் செளுத்தப்படுவதாலும், உயிருக்கு ஆபத்து உண்டாக்குகிறது. முதலுதவி என்ன விஷம் உட்கொண்டார், எவ்வளவு அளவு உட்கொண்டார், எவ்வளவு நேரத்திருக்கு முன்பு உட்கொண்டார் என்பதை முதலில் கண்டுபிடியுங்கள். உடனே மருத்துவ உதவியை நாடுங்கள். அவரை வாந்தி எடுக்கத் தூண்டாதீர்கள். அவ்வாறு செய்தால் வாந்தி அவர் சுவாசக் குழாயினுள் சென்று மூச்சுத் திணறல் உண்டாக வழியேற்படும். அவரது உணவுப்பாதையும், குடலும் பாதிக்கப்படும். அவர் சாப்பிட்ட விஷத்தையும் வாந்தி எடுத்தாறேன்றால், அவர் வாந்தி எடுத்தபொருளையும் சேர்த்து அவருடன் மருத்துவமனைக்கு அனுப்பி வையுங்கள்.

மலையளவு ஒளிவீசும் வைரங்களின் கதைகள்

Image
இந்தியாவை ஆண்ட அலாவுதீன் கில்ஜி யின் சேனாதிபதி மாலிக் கபூரின் தென்னிந்தியப் படையெடுப்பின் பொது கைப்பற்றப்பட்டது ஒரு வைரம். பின்னர் குவாலியர் மன்னர் குடும்ப வசமானது அந்த வைரம். ஹுமாயுன் தலைமையில் பாபர் படைகள் குவாலியரை தாக்கியபோது, குவாலியர் மன்னர் குடும்பத்தினர் தமது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அவ்வைரத்தை விலையாகக் கொடுத்தனர். ஹுமாயுன் தனது தந்தை பாபரிடம் அத வெற்றி பரிசாக அளித்தார். பாபர் அந்த வைரத்தை ஹுமயுனிடமே திருப்பித் தந்துவிட்டார். பின்னர், பாரசீக மன்னர் ஷா தாமாஸ்ப் கைக்கு போன அவ்வைரம், தட்சிணப் பீடபூமியை ஆண்ட நிஜாம் ஷாவை வந்தடைந்தது. 17-ம் நூற்றாண்டில் ஷாஜஹான் வசம் வந்தது அந்த வைரம். பின்னர் மொகலாய மன்னர்களிடம் பாதுகாப்பாக இருந்தது. 1739-ல் டெல்லியை சூரையாடிஅய பாரசீக மன்னர் நாதிர் ஷா, மொகலாய மன்னர் முகமது ஷாவிடம் இருந்து அந்த வைரத்தைக் கைபற்றிகொண்டார்.  பிரசித்தி பெற்ற "கோஹினூர்" வைரத்தின் கதை இது. அதற்கு கோஹினூர் ('மலையளவு ஒளிவீச்சு') என்று பெயரிட்டவரும் நாதிர்ஷாதான். தாதிர் ஷாவுக்குப் பின்னர் அவரது வழித்தோன்றல்களிடம் இருந்தது இந்த வ...

வழிகாட்டபோகும் கார் கண்ணாடி

Image
கார் முன் தடுப்புக் கண்ணாடி எதற்குப் பயன்படுகிறது என்பது தெரியுமா? இதென்ன புது கேள்வி, பாய்ந்து வரும் காற்றில் இருந்தும், வெளிப்புறச் சூழல், மாசுகளில் இருந்து காப்பதற்க்கும்தான் என்கிறீர்களா? ஒரு நிமிடம், வருங்காலத்தில் கார் முன் தடுப்புக் கண்ணாடி, டிரைவருக்கு வழிகாட்டப் போகிறது. ட்ரூ 3d   என்ற புதிய தொழில் நுட்பத்தின் மூலம், கண்ணாடியில் வழிகாட்டும் சைகைகள், தகவல்களை அளிக்கும் ஒரு புதிய சாதனம் உருவாக்கப்படிருக்கிறது. இந்த ஆண்டு ஜெர்மனியின் மியூனிச் நகரில் நடைபெற்ற, ஐரோப்பிய சாட்டிலைட் வழிகாட்டல் போட்டி யில் இந்த சாதனத்துக்கு முதல் பரிசு கிரைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.           லேசர் அடிப்படையிலான இந்த அமைப்பு, ஒரு சிவப்பு முப்பரிமாணக் கோட்டை உங்கள் கார் கண்ணாடியில் இருந்து சாலை நோக்கி நீட்டும். சாலை மீது மிதந்து செல்லும் இக்கோட்டை டிரைவர் பின்பற்றினாலே போதும்.ரெயில் இருப்புப் பாதையில் செல்வதைப் போல, குறிப்பிட்ட இடத்துக்குச் சென்றுவிடலாம். கவனத்தைத் திசை திருப்பாத, தொந்தரவில்லாத, ஒளிஊடுவக்கூடிய வலிகாட்டிக்கோடாக இது...

விண்வெளியில் ஒரு தீபாவளி

Image
  நமது பூமி உள்ளிட்ட கிரகங்கள் அடங்கிய பால்வீதி மண்டலம், தனது அண்டைவீடான  கேளக்சியுடன் மொதப் போகிறது இதனால் சூரியன் உள்பட நட்சத்திரங்கள் எல்லாம் அங்குமிங்கும் வீசிஎரியப்படப் போகின்றன. பயப்படாதீர்கள், இதெல்லாம் நடப்பதற்கு 400 கோடி ஆண்டுகள் ஆகும் , அமெரிக்காவின் பால்டிமோரில் உள்ள ஸ்பேஸ் டெலஸ்கோப் சயன்ஸ் இன்ச்டிட்யுட் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கூறும் தகவல் இது. மேற்கண்ட இரு பிரபஞ்ச மண்டலங்களும் நேருக்கு நேராக மோதிக் கொண்டாலும், பூமியும் சூரியக் குடும்பமும் சேதம் அடையாது. மாறாக தற்போது இவை இருக்கும் இடங்களில் இருந்து இடப் பியர்ச்சி அடையலாம். சூரியன் ஏதோ ஒரு மூளைக்கும், நட்சத்திரங்கள் வெவ்வேறு சுற்றுவட்டப் பாதைக்கும் தூக்கியெறியப்பட அதிக வாய்ப்பிபில்லை என்றும் விண்வெளி விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். பல நூறு கோடி ஆண்டுகளுக்குப் பின் விண்வெளியில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படக்கூடும் என்று ஒரு நூற்றண்டுக்கும் மேலாக ஊகமாகப் பேசப்பட்டு வந்தது. தபோதுதான் நாம் ஒரு தெளிவான முடிவுக்கு வந்திருக்கிறோம் இன்கிறார், மேற்கண்ட விண்வெளி ஆய்வு நிறுவனத்தில் பணியாற்றும் சாங்மோ ...

மரணத்தின் இன்னொருபக்கம்

Image
மறுஜென்மம் உள்ளதா இல்லையா என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். மரணத்தின் மறுபக்கம் எப்படி இருக்கும் என்பதை பலரிடம் ஆராய்ந்து அது இப்படித்தான் இருக்கும் என்று தகவல் தருகிறார்கள் ஆய்வாளர்கள்.     அதன்படி நான் இறந்துவிட்டேன் என்று உணர்வதுதான் முதல்நிலை. அதன்பின் பூமியில் இருந்து வெளியேறி வின் வெளியில் சுற்றிச்சுலழ்வது போல் உணர்தல் இரண்டாம் நிலை. உடலைவிட்டு விலகி வெளியே சென்று பார்ப்பது போன்று உணர்தல், உடலைச்சுற்றி டாக்டர்கள், உறவினர்கள் நிற்பதை பார்ப்பது மூன்றாம் நிலை.   மிக அமைதியான, வெளிச்சம் குறைவான சுரங்கத்திற்குள் போய்க்கொண்டே இருப்பது போல உணர்தல் – இது நான்காம் நிலை. கண்ணை கூசவைக்கும் அதீதமான வெளிச்சத்தை நோக்கி மெதுவாக பறப்பது போன்று உணர்தல் 5-ம் நிலை. வெண்மையான அல்லது வெள்ளை நிற உடை அணிந்த ஆணா, பெண்ணா என்று அடையலாம் கண்டுபிகிக்க முடியாத உருவங்களை பார்ப்பது 6-ம் நிலை. ஒருவர் வாழ்வில் நடந்த எல்லா சம்பவங்களும் அவர் கண்முன்னால் வந்து செல்வது 7-வது நிலை.      கீழே கிடக்கும் தன உடலுக்குள் நிலைய வேண்டும் என்ற ஆசையும், வேண்டாம் என்ற வெறுப்...

யானைகள் பற்றிய அறிய தகவல்கள்

Image
      நிலத்தில் வாழும் மிகப்பெரிய விளங்கு யானை தான். அதிலும் ஆப்பிரிக்க யானைகளோ ஆசிய யானைகளை விட பெரிய தாகும். இந்த யானை 4.5 மீட்டர் உயரம் வளரும். 3 ,632 k.g எடை இருக்கும். ஒரு நாளைக்கு 272 k.g உணவும், 227 லிட்டர் தண்ணீரும் குடிக்கும்.      பெண் யானை, கருத்தரித்த 22 மாதங்கள் கழித்து குட்டி போடும். காட்டு யானைகள் மார்ச் முதல் மே மாதம் வரைதான் குட்டி போடுகின்றன. யானைகள் கூட்டமாக வாழும் தன்மை கொண்டவை. ஒரு கட்டத்தில் 30 முதல் 50 யானைகள் வரை இருக்கும். அதற்கு ஒரு தலைமை யானையும் உண்டு. யனைகுட்டிகள் 5 ஆண்டுகள் வரை தாயின் பாலை குடித்தே வளர்கின்றன. குட்டி, தாயை விட்டு பிரிவதேயில்லை. தனது வாயாலேயே பால் குடிக்கும். துதிக்கையால் அல்ல. தாய் என்று இல்லை. எந்த பெண் யானை பால் கொடுத்தாலும் குட்டி அந்த பாலை குடிக்கும்.        பிறக்கும் போது குட்டி 90 முதல் 135 கிலோ எடை வரை இருக்கும். யானை எப்போதும் ஒரே பாதையில்தான் போய் வரும். யானைகள் 90 முதல் 200 ஆண்டுகள் வரை உயிர் வாழும் தன்மை உடையது. சில யானைகளின் தந்தங்கள் 90 கிலோ வரை எட...

இனி எப்பொழுதும் வெப்பமே

Image
  ஒவ்வொரு நாளும் மக்களின் சராசரி புலம்பல் "இந்த வெயில் எப்போதான் குறையுமோ தெரியல" அவர்களுக்கான பதில் இனி வரும் ஒவ்வொரு கோடைகாலங்களில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கத்தான் செய்யும். இனி கோடைகாலமும் நீண்டுகொண்டுதான் போகும்.                   உலகளவில் இதுவரை இருந்துள்ளதைக் காட்டிலும் அடுத்த இரண்டு ஆண்டுகள் மிகவும் வெப்பம் அதிகமான ஆண்டாகத்தான் இருக்கப் போகிறது என இங்கிலாந்து வானிலை ஆய்வகம் கூறியுள்ளது. மேலும் பசிபிக் பெருங்கடலில்  ஏற்பட்டுள்ள எல்நின்யோ விளைவு , உலகம் முழுவதும் வெப்பத்தை அதிகரிக்கும் என ஆய்வுகள் தெரிவிப்பதாக இங்கிலாந்து நாட்டை சேர்ந்த அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.   அதேநேரம், உலகின் மற்றபகுதிகளில் வெப்பம் அதிகரிக்கும்போது,ஐரோப்பாவில் கோடைக் காலம் வழக்கத்தை விடக் குளிர்ச்சியாக இருக்கும் எனவும் அந்த ஆய்வு கூறுகிறது. கடந்த 1961 மற்றும் 1990-ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் மேற்பரப்பில் இருந்த சராசரி வெப்ப அளவைவிட இந்த ஆண்டு அது 0.68 சென்டிகிரேட் அதிகமாக...

இமய மலையில் வாழும் மர்ம மனிதன்

Image
மர்மங்கள், அமானுஷ்யங்கள், புதிர்கள் என இவைகளை சார்ந்த எந்த விசயமாக இருந்தாலும் அது உண்மையோ, பொய்யோ, கட்டுகதையோ அல்லது உண்மையாக நடந்த சம்பவங்களின் தொகுப்போ, எதுவாக இருந்தாலும், இவைகளை சார்ந்த தகவல்களை தெரிந்து கொள்வதில் மனிதர்களுக்கு என்றுமே ஆர்வம் அதிகம்தான் என்பதை மறுக்கமுடியாது.    இமயமலையில் வெகுகாலமாக நிலவி வரும் ஒரு மர்மம்தான் YETI . YETI என்பது ஒரு மர்ம மனிதன் . இதை பற்றிய ஒரு சில சுவாரஸ்மான தகவல்கள் உங்களுக்காக.    YETI என்று சொல்லகூடிய மர்ம மனிதனை ABOMINABLE KNOW MAN பார்க்கவே அருவருப்பாக காட்சியளிக்கும் பனிமனிதன் என் றும் கூறுகின்றனர். வானரம் போன்ற உருவ தோற்றமும், சராசரி மனிதனை விட இரண்டு மடங்கு அதிக உயரம் கொண்டு இமயமலை பகுதிகளில் இந்த பனி மனிதன் வசிக்கிறான் என்று நேபாள், பூட்டான், திபெத் பகுதிகளில் நம்பப்படுகிறது.    YETI என்ற இந்த பெயர், இந்த பகுதிகளில் புராண காலத்தில் இருந்தே வழக்கத்தில் இருந்து வருகிறது. இந்த பனி மனிதனை பற்றிய கதைகள் 19-ம் நூற்றாண்டில் இருந்தே இந்த பகுதி மக்களிடையே பேசப்பட்டு வருகிறது. Scientific commu...